/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநாடு
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநாடு
ADDED : நவ 19, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் தாமோதரன், மாநிலத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். போடி சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும்.
போடியில் இருந்து மதுரைக்கு காலையில் ரயில் சேவை வழங்கிட வேண்டும். ஊராட்சிச் செயலாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
இரவு நேர ஆய்வுக் கூட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிசந்திரன், மாவட்டப் பொருளாளர் அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

