/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
/
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
ADDED : ஆக 12, 2025 05:31 AM
கம்பம், : போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் செய்த வாகனங்களால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றை ஏலம் விட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு சப்டிவிஷனிலும் குறைந்தது 5 ஸ்டேஷன்களும் அதிகபட்சமாக 10 ஸ்டேஷன்களும் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்த டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கம்பம் வடக்கு, தெற்கு, உத்தமபாளையம், சின்னமனுார் ஸ்டேஷன்களில் மட்டும் குறைந்தது 500 முதல் ஆயிரம் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் செடி கொடிகள் வளர்ந்து பாம்புகள், பூரான்கள் என விஷ ஜந்துக்கள் வாழ்விடமாக மாறி வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தர வருபவர்களும், போலீசாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஸ்டேஷன்களில் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, பாம்புகள் அடிக்கடி வந்து களேபரம் ஆவது வாடிக்கையாகி வருகிறது.எனவே பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., சினேஹா பிரியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.