/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை ஆசாமி ஏற்றிய காங்., கொடி:பா.ஜ., போலீசில் புகார்
/
போதை ஆசாமி ஏற்றிய காங்., கொடி:பா.ஜ., போலீசில் புகார்
போதை ஆசாமி ஏற்றிய காங்., கொடி:பா.ஜ., போலீசில் புகார்
போதை ஆசாமி ஏற்றிய காங்., கொடி:பா.ஜ., போலீசில் புகார்
ADDED : மார் 20, 2024 12:19 AM
தேனி : போதை ஆசாமியால் காங்., கம்பத்தில்  விதிமீறி கொடி  ஏற்றியதால் தேனி காங்கிரஸ் கட்சியினர் மீது, பா.ஜ., கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே காங்., கொடி கம்பம் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலானதால் தேர்தல்   காங்., கட்சியினர் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை அகற்றினர். இந்நிலையில் நேற்று காலை அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர், கொடிகம்பத்தில் காங்கிரஸ் கொடியை, தலைகீழாக ஏற்றி சென்றார். இதனை கவனித்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நகர தலைவர் கோபிநாத்யிடம் தெரிவிததார். அவர் கொடி அகற்றினார். இந்நிலையில் மாலையில் மீண்டும் அதே போதை ஆசாமி ஒருவர், காங்கிரஸ் கொடியை கம்பத்தில் அரைகுறையாக ஏற்றி  சென்றார். இது பற்றி தேனி பா.ஜ., மாவட்ட செயலாளர் அஜித்இளங்கோ, நகரத் தலைவர் மதிவாணன் ஆகியோர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் முறையிட்டனர். கொடி அகற்றப்படும் என தெரிவித்தை தொடர்ந்து  ஸ்டேஷனை விட்டு சென்றனர்.

