/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராகுல் கைதை கண்டித்து காங்கிரசார் மறியல்
/
ராகுல் கைதை கண்டித்து காங்கிரசார் மறியல்
ADDED : ஆக 13, 2025 02:18 AM

தேனி: சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வலியுறுத்தியும், பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் டில்லியில் நேற்று எதிர்கட்சிகளின் எம்.பி.,க்கள் இணைந்து இந்திய தேர்தல் ஆணையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதில் ராகுல் உட்பட எதிர்கட்சி லோக்சபா எம்.பி.,கள் கைது செய்யப்பட்டனர். ராகுல் கைதை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். துணைத் தலைவர் சன்னாசி, பொருளாளர் பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் சம்சுதீன், நகரத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், மகிளா காங்., நிர்வாகிகள் உள்ளிட்ட 42 ஆண்கள், 16 பெண்கள் பங்கேற்றனர். மொத்தம் 58 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.