/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் காங்.,சார்பில் உண்ணாவிரதம்
/
கம்பத்தில் காங்.,சார்பில் உண்ணாவிரதம்
ADDED : டிச 11, 2024 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பத்தில் காங். கட்சி சார்பில், 'மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ. அரசை கண்டித்து' உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பார்க் திடலில் நடந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட காங். கட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகர் தலைவர் போஸ் முன்னிலை வகித்தார்.
சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ராஜா முகமது வரவேற்றார். உண்ணாவிரதத்தில் மகிளா காங். மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, கவிஞர் பாரதன், கவுன்சிலர் சர்புதீன், முன்னாள் கவுன்சிலர் சிவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

