
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய, வன்முறையாளர்களை கைது செய்யாததை கண்டித்தும் மணிப்பூர் மாநில பா.ஜ., அரசு, மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
நகரதலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சம்சுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சின்னபாண்டி, நகர தலைவர்கள், வட்டாரத்தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.