ADDED : பிப் 18, 2024 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நேரு சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதற்கு வரவேற்பு அளித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சம்சுதீன், சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஆண்டிபட்டி ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் சின்னப்பாண்டி, நகரத் தலைவர் கோபிநாத் , நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.