/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரை கைது செய்யக்கோரி காங்., போராட்டம்
/
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரை கைது செய்யக்கோரி காங்., போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரை கைது செய்யக்கோரி காங்., போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரை கைது செய்யக்கோரி காங்., போராட்டம்
ADDED : மே 02, 2025 06:56 AM

மூணாறு: தோட்டத் தொழிலாளர் உள்பட பலரை ஏமாற்றி ரூ.பல லட்சங்களை மோசடி செய்த மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகரை கைது செய்யுமாறு வலியுறுத்தி காங்., இளைஞரணியினர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் போராட்டம் நடத்தினர்.
மூணாறு அருகே எல்லப்பட்டி எஸ்டேட்டைச் சேர்ந்த சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பிலான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளராகவும், கட்சியிலும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் அரசு வழங்கும் பல்வேறு நிதியுதவிகளை வாங்கி தருவதாக கூறி தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் உள்பட பலரிடம் ரூ. பல லட்சங்களை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யுமாறு வலியுறுத்தி மூணாறு போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் இளைஞரணியினர் சென்றனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அருகில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
அதன்பிறகு போலீஸ் ஸ்டேஷன் அருகில் நடந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மணி துவக்கி வைத்தார்.
காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் டோணி தாமஸ், மண்டல தலைவர் அனில் கனகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

