/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடமலைகுடிக்கு கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி மீண்டும் துவக்கம் 6 மாதங்களுக்கு பின் மீண்டும் துவக்கம்

ADDED : டிச 11, 2024 07:00 AM
மூணாறு : இடமலைகுடிக்கு கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது.
மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர்.
அங்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் ராஜமலை பெட்டிமுடி, புல்மேடு முதல் சொசைட்டிகுடி வரை 13 கி.மீ. தூரம் ரூ.11.5 கோடி செலவில் கான்கிரீட் ரோடு அமைக்கப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக புல்மேடு முதல் இடலி பாறைகுடி வரை 7.7 கி.மீ.தூரம் ரோடு ரோடு அமைக்கும் பணி கடந்த டிசம்பரில் துவங்கியது.
கேப்பைகாடு வரை 4 கி.மீ. தூரம் ரோடு கான்கிரீட் செய்யப்பட்ட நிலையில், தென் மேற்கு பருவ மழை துவங்கியதையடுத்து கடந்த மே இறுதி முதல் பணிகள் முடிங்கின.
சிக்கல்: மழை முடிந்து பணிகளை துவக்க ஒப்பந்ததாரர் எண்ணியபோது, இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் சேதமடைந்த ரோடு வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அந்த வழியில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
அனுமதி: ரோடு சீரமைக்கப்பட்டதையடுத்து கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி அளித்ததால், ஆறு மாதங்களுக்கு பிறகு கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி நேற்று முதல் மீண்டும் துவங்கின.