/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாயில் குவியும் கட்டடக் கழிவுகள்
/
18ம் கால்வாயில் குவியும் கட்டடக் கழிவுகள்
ADDED : ஏப் 30, 2025 06:37 AM

கூடலுார்; 18ம் கால்வாய் கரைப்பகுதியில் கட்டடக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். இக் கால்வாய் மூலம் 4650 ஏக்கரில் நேரடி பாசனமும், இக் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள 43 கண்மாய்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி நிலங்களும் பயன்பெறுகின்றன.
இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கட்டடக் கழிவுகள் அனைத்தும் இக் கால்வாயின் கரைப்பகுதியில் கொட்டப்படுகிறது.
குறிப்பாக கூடலுார் அருகே கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. அதிக அளவில் கொட்டுவதால் கழிவுகள் முழுவதும் கால்வாயின் மையப்பகுதியில் தேங்குகிறது. இது தவிர குப்பையுடன் கொட்டுவதால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது கழிவுகளால் வெளியேற முடியாத நிலை ஏற்படும். அதனால் கட்டடக் கழிவுகளையும் குப்பையையும் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.