/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளால் சிகிச்சைக்கு வருவோர் சிரமம் நடை பாதையில் மண் கொட்டி, வாகனங்களை நிறுத்தி இடையூறு
/
ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளால் சிகிச்சைக்கு வருவோர் சிரமம் நடை பாதையில் மண் கொட்டி, வாகனங்களை நிறுத்தி இடையூறு
ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளால் சிகிச்சைக்கு வருவோர் சிரமம் நடை பாதையில் மண் கொட்டி, வாகனங்களை நிறுத்தி இடையூறு
ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளால் சிகிச்சைக்கு வருவோர் சிரமம் நடை பாதையில் மண் கொட்டி, வாகனங்களை நிறுத்தி இடையூறு
ADDED : நவ 18, 2025 04:32 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். கரடு, முரடான நடை பாதையில் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் - வடுகபட்டி ரோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த நகராட்சி மகப்பேறு மருத்துவமனை தற்போது நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒரு டாக்டர், 7 நர்ஸ்கள் உள்ளனர். தினமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற நுாற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப் படுகிறது.
இடை யூறு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு ரூ.1.50 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் மருத்துவமனை செயல்படுகிறது.
மருத்துவமனை ஒரே ஹாலில் கம்ப்யூட்டரில் ஓ.பி., பதிவு, டாக்டர் பரிசோதனை, ஆய்வகம், மருந்தகம், கர்ப்பிணிகள் பரிசோதனை என அனைத்து சேவைகளும் இட நெருக்கடியான ஒரு ஹாலில் நடக்கிறது. சிகிச்சைக்கு வரும் முதியோர்கள், பெண்கள் உட்கார போதிய இருக்கை வசதிகள் இல்லை.
இச்சூழலில் மருத்துவமனைக்கு வரும் நடைபாதையில் கட்டுமானப் பணிக்கான கல், மண் குவித்தும், இரும்பு தளவாட பொருட்களை வைத்து வேலை செய்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள் அச்சத்தடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் ஒப்பந்ததாரர்கள் இதை பற்றி கண்டு கொள்ளாமல் பணிகளை செய்து வருகின்றனர். இங்கு பணியாற்றிய டாக்டர் மே 2025ல் ஓய்வு பெற்றதால் வைகை அணை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபிகா, இங்கு பொறுப்பு டாக்டராக அவ்வப்போது வந்து செல்கிறார்.
தேனி மருத்துவக் கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் இருவர் வந்து செல்கின்றனர். நோயாளிகள் வருகை அதிகரிப்பால் இங்கு 2 டாக்டர்கள் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என, நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
இரவல் செல்லும் பரிசோதனை கருவிகள் இங்குள்ள நவீன ரத்த பரிசோதனைக் கருவி, ரத்த அழுத்த கருவிகளை மாவட்டத்தில் நடக்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. முகாம் நடைபெறும் முதல்நாளே மருத்துவக் கருவிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அவை திரும்ப இங்கு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகிறது. அதுவரை நோயாளிகள் பரிசோதனை சேவைகள் பாதிக்கப்படுகின்றன. பணியாளர்கள் இதை வெளியில் கூறாமல் குறிப்பிட்ட நாளில் வந்து பரிசோதனை செய்யுங்கள் என, பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதலாக கூறி அனுப்பி வைக்கின்றனர்.
பாதிக்கப் பட்ட வர்கள் சிரமம் பகவதி, பெரியகுளம்: வளாகத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளால் முறையான பாதை இல்லை. துாசிகள் பறக்கிறது. கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.
ஒப்பந்ததாரர் பணி நடக்கும் பகுதியை சுற்றி தடுப்பு வலை அமைத்து, கட்டுமானப்பணி நோயாளிகளுக்கு இடையூறு இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதை அனைவரும் தெரியும் வகையில் 'கேட்' முன் அறிவிப்பு பலகை எழுதி வைக்க வேண்டும். இதனால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன் பெறுவர்., என்றார்.

