/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் தீவிரம்
/
புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 21, 2025 02:16 AM
கம்பம்,: ''கம்பம் நகராட்சியில் அரசு பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி, புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.'' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நகராட்சியில் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இரு மாநில மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ரூ.1.65 கோடி செலவில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் மீதமுள்ள சிறு, சிறு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பஸ்களை வழக்கம் போல இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போல ரூ.2.65 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஆம்னி பஸ்களுக்கு என, தனி பஸ் ஸ்டாண்ட் கம்பத்தில் மட்டுமே கட்டப்படுகிறது.
மழைக்காக நிறுத்தம்
ரூ.4 கோடியில் ரோடு அமைக்கும் பணிகள் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை நின்றவுடன் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.