நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் பெரியகுளம் ரோட்டில் உள்ள பா.ம.க., அலுவலகத்தில் தேனி நகர செயலாளர் காஜாமைதீன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில துணைப்பொதுச்செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலையில் டிச.,21ல் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட, நகர நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

