நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் வாக்காளர் சுருக்க திருத்த பணிகள், 2025 ஜன.,6ல் வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர்பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத் பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயிணி , கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தாசில்தார்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

