நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களா மேட்டில் தேனி தமிழ் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு தர்பூசணியில் திருவள்ளுவர் சிலை செதுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொருளாளர் முகமது பாட்ஷா முன்னிலை வகித்தார். காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன் சிற்பம் செதுக்கினார். டாக்டர்கள் பாஸ்கரன், மோனிகா பிரீத்தி, தாமோதரன், செல்வமுருகதாஸ், பொன்கணேஷ், ஐயப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

