நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் தனியார் மண்டபத்தில் ஒக்கலிக்கர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புதிய நிர்வாகிகள் நியமனம், சமுதாய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜனகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற எஸ்.பி., ரத்தினசபாபதி, மாநில பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைவராக மும்மூர்த்தி, செயலாளராக ராஜவேல், பொருளாளராக உடையாளி தேர்வு செய்யப்பட்டனர். அறக்கட்டளை நிர்வாகிகள் அசோகன், மாதவன், ராஜன், விவேகானந்தன் பங்கேற்றனர்.

