/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்குவாரிக்கு அனுமதி கருத்து கேட்பு கூட்டம்
/
கல்குவாரிக்கு அனுமதி கருத்து கேட்பு கூட்டம்
ADDED : டிச 25, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி,டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி வண்ணாத்திப்பாறையில் காளீஸ்வரி கல் உடைக்கும் மகளிர் சங்கம், நாகம்மாள் கல்லுடைக்கும் மகளிர் சங்கம் செயல்படும் கல் குவாரிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்பு
கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளர் சுகுமார், ஆண்டிபட்டி தாசில்தார் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதக பாதகங்கள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.

