/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்
/
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்
ADDED : டிச 25, 2025 05:47 AM
பெரியகுளம்: பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் புறக்கணிப்பதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
தேனியிலிருந்து பெரியகுளம் வழியாக திண்டுக்கல், திருச்சி செல்லும் பஸ்கள் பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட்டிற்குள் செல்ல மறுக்கின்றனர். பயணிகளை ஏற்றும் போதே பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிலர் 'பெரியகுளம் பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லாது' என கூறி ஏற்றுகின்றனர். இதனால் பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே பயணிகளை ஏற்றிச் செல்வதும், அங்கேயே இறக்கி விடுகின்றனர். இரவில் திண்டுக்கல்லிலிருந்து தேனி, கம்பம், குமுளி செல்லும் பஸ்கள், பெரியகுளத்தை புறக்கணித்து, எ.புதுப்பட்டி பைபாஸ் வழியாக தேனிக்கு செல்கின்றனர். இதனால் பெரியகுளம், லட்சுமிபுரம் பயணிகள் எப்போது பஸ் வரும் என காத்திருக்கும் நிலை உள்ளது. திண்டுக்கல், தேனி பஸ்ஸ்டாண்டிலே பெரியகுளம் போகாது, என கூறும் கண்டக்டர், டிரைவர் பெயர்களை கவனித்து அவர்கள் குறித்து புகார் கூறலாம் என்றால் அவர்கள் பெயர் பொறித்த பேட்ஜ் அணிந்திருப்பதில்லை. அவர்களிடம் கேட்டால் பதிலும் சொல்வதில்லை.இது குறித்து சமூக ஆர்வலர்கள் டெப்போ மேலாளர்களிடம் புகார் தெரிவிக்க சிரமப்படுகின்றனர். அனைத்து பஸ்களும் பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்றுவரவும், பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர்கள் பெயர் பேட்ஜ் அணிந்து பணிபுரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

