ADDED : ஜன 14, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியில் அ.ம.மு.க., சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் தங்கப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வம் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர் கதிர்காமு பேசினர். வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம்,தெற்கு ஒன்றிய செயலாளர் திருமலை நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார், தொகுதி செயலாளர் அய்யணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

