நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குபேந்திரசெல்வன் தலைமை வகித்தார். 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஏப்.,3ல் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஏப்.25ல் சென்னையில் நடைபெறும் தர்ணாவில் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் முகமது அலி ஜின்னா, ரகுநாத், சசிகுமார், சிவனாச்சிமுத்து, ஆஷிக், விஸ்வநாதன், சரவணமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.