நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பொம்மையக் கவுண்டன்பட்டியில் உள்ள ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
நிறுவனர் ரவி, நிர்வாகி அழகு பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் சுகாதாரப் பணியை தீவிரப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் உட்பட 3 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.