/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு கட்சியினருடன் ஆலோசனை செப்.,15ல் நடத்த ஏற்பாடு

ADDED : செப் 10, 2025 02:28 AM
தேனி : மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு பற்றி அரசியல் கட்சியினருடன் கலெக்டர் தலைமையில் செப்., 15ல் ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் 4 சட்டசபை தொகுதிகளில் 1226 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்சம் 1200 வாக்காளர்கள் இருக்கலாம். அதற்கு மேல் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிவாரியாக ஆண்டிபட்டியில் 29, பெரியகுளம்(தனி) 62, போடி 31, கம்பம் 46 என மொத்தம் 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்போது 1394 ஓட்டுச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது பற்றி அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் செப்., 15ல் கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது,' என்றனர்.