ADDED : பிப் 14, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான நுகர்வோர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு போட்டிகள், நுகர்பொருட்களை காட்சிப்படுத்தி அதில் உள்ள முத்திரைகள், காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வகைப்படுத்துதல், கலப்படப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 6 கல்லுாரிகள், 28 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் 25 பேர், பேராசிரியர்கள் 6 பேர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். போட்டி ஏற்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மாநில பொதுச்செயலாளர் புதுராஜா செய்திருந்தார்.

