ADDED : பிப் 08, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொது வினியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை(பிப்.,8) நடக்கிறது. இக்கூட்டத்தை கண்காணிக்க தாலுகா வாரியாக சப்கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி உப்பார்பட்டி ரேஷன் கடை, பெரியகுளம் இ.புதுக்கோட்டை கிராமம் முருகமலைநகர் ரேஷன்கடை, ஆண்டிபட்டி போடிதாசன்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் லோயர்கேம்ப் பளியன்குடி ரேஷன்கடை, போடி போ.நாகலாபுரம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.