/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் தொடரும் மழை; நிரம்பி வழியும் சண்முகாநதி அணை
/
மேகமலையில் தொடரும் மழை; நிரம்பி வழியும் சண்முகாநதி அணை
மேகமலையில் தொடரும் மழை; நிரம்பி வழியும் சண்முகாநதி அணை
மேகமலையில் தொடரும் மழை; நிரம்பி வழியும் சண்முகாநதி அணை
ADDED : ஜன 10, 2024 12:45 AM

கம்பம் : மேகமலையில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் சண்முகா நதி அணை நிரம்பி வழிகிறது.
ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் சண்முகா நதி அணை கட்டப்பட்டுள்ளது. 52.5 அடி உயரம் உள்ள இந்த அணையிலிருந்து பாசனத்திற்கென 26 அடி வரை தண்ணீர் எடுக்கலாம்.
தென்மேற்கு பருவமழை காலத்தை விட வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த அணை நிரம்பும். இந்த அணை ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, எரசை, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், ஒடைப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 1440 ஏக்கருக்கு மறைமுக பாசனத்திற்கு பயன்படுகிறது. இக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படுகிறது.
விநாடிக்கு 14.47 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. அணையின் கொள்ளளவு 49 அடி உயர்ந்தது. இரு நாட்களாக பெய்து வரும் மழையால் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து 14.47 கனஅடி எடுப்பதை தவிர்த்து 10 கனஅடி உபரி நீர் மறுகால் பாய்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் அணையிலிருந்து 160 கனஅடி வரை வரட்டாறு வழியாக மறுகால் பாய்கிறது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

