/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்
/
தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்
ADDED : நவ 04, 2024 05:43 AM
கம்பம், : தொடர் மழையால் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பழங்கள் உடைவதும், பிஞ்சுகள் உதிர்கிறது. இந்நிலையில் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் பெரும்பாலும் பன்னீர் திராட்சையே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் உள்ளது. இலைகள், பிஞ்சுகள் கருகி போகிறது. மழை தொடர்வதால் பிஞ்சுகள் உதிர்வதும், பழங்கள் உடைந்தும் வருகிறது.
மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக பொது மக்கள் நுகர்வு குறைந்துள்ளது . எனவே கிலோ ரூ.25 முதல் 30 வரை விலை குறைந்து கிடைக்கிறது. இந்நிலை நீடிக்கும் என தெரிகிறது. இதனால் திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.