/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழை: மீறு சமுத்திர கண்மாய் மறுகால் பாய்ந்தது
/
தொடர் மழை: மீறு சமுத்திர கண்மாய் மறுகால் பாய்ந்தது
தொடர் மழை: மீறு சமுத்திர கண்மாய் மறுகால் பாய்ந்தது
தொடர் மழை: மீறு சமுத்திர கண்மாய் மறுகால் பாய்ந்தது
ADDED : நவ 04, 2024 05:20 AM

தேனி : மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திர கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பரவலாக பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்ல துவங்கி உள்ளன.
தேனி நகர் பகுதியில் தாலுகா அலுவலகம், உழவர் சந்தை அருகில் மீறு சமுத்திர கண்மாய் 120 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் நகர் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த கண்மாய்க்கு வீரப்ப அய்யனார் கோயில் ஓடைகள் மூலம் வரும் நீர், சின்ன குளம் கண்மாயை தொடர்ந்து, மீறு சமுத்திர கண்மாய்க்கு வருகிறது.
இந்நிலையில் நேற்று மீறு சமுத்திர கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மறுகால் பாயும் நீர் கொட்டக்குடி ஆற்றின் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.
இதே போல் அம்மச்சியாபுரம் அருகே உள்ள செங்குளம் கண்மாயும் நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.