/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை பராமரிப்பு பணி கேரளா முரண்டால் மீண்டும் சர்ச்சை
/
பெரியாறு அணை பராமரிப்பு பணி கேரளா முரண்டால் மீண்டும் சர்ச்சை
பெரியாறு அணை பராமரிப்பு பணி கேரளா முரண்டால் மீண்டும் சர்ச்சை
பெரியாறு அணை பராமரிப்பு பணி கேரளா முரண்டால் மீண்டும் சர்ச்சை
ADDED : டிச 11, 2024 02:24 AM

கூடலுார்:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.
இந்த அணை பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள், கேரள மாநிலம், வள்ளக்கடவு சோதனை சாவடியில் அம்மாநில வனத்துறை அனுமதி மறுப்பால் ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, தற்போது தமிழகம் திரும்பின.
அணை, பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் இருப்பதால் அங்கு பராமரிப்பு பணி செய்யும் தகவலை மட்டும் கேரள வனத்துறையினரிடம் தெரிவித்து விட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், புதிதாக கேரள நீர்ப்பாசனத் துறையிடம் அனுமதி பெற்ற பின் பணிகள் செய்ய வேண்டும் என்ற நடைமுறை, கேரள அரசால் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதிலும் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், அணையின் உரிமை பறிபோகும் என, விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.
ஓய்வு பெற்ற பெரியாறு அணை செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் கூறியதாவது:
பராமரிப்பு பணி செய்ய முழு அதிகாரம் தமிழக நீர்வளத்துறைக்கு மட்டுமே உள்ளது. அதற்கேற்ப அனைத்து கண்காணிப்பு குழுவும் பணிகள் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இருந்த போதிலும் தளவாட பொருட்களை கொண்டு செல்ல தடுப்பதில் நியாயம் இல்லை.
அணை பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் இருப்பதால் தளவாட பொருட்களை எடுத்துச் செல்லும்போது கேரள வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
கேரள நீர்ப்பாசனத்துறைக்கு இதற்கான தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது, அனுமதி பெற வேண்டியதில்லை. இதுதான் நான் அங்கு பணிபுரியும் வரை இருந்து வந்த நடைமுறை.
இவ்வாறு கூறினார்.