/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு: 566 பேர் பங்கேற்பு
/
கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு: 566 பேர் பங்கேற்பு
கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு: 566 பேர் பங்கேற்பு
கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு: 566 பேர் பங்கேற்பு
ADDED : அக் 12, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் உள்ள 12 காலிப்பணியிடங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள 19 என மொத்தம் 31 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வு எழுத 673 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 566 பேர் தேர்வு எழுதினர்.
107 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வினை கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா தலைமையில், தேர்வு கட்டுப்பாடு துணை பதிவாளர் செல்வராஜ், துணைப்பதிவாளர் ரமேஷ், சார்பதிவாளர் விஸ்வன் உள்ளிட்டோர் நடத்தினர்.