/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 12, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் செவனம்மாள் 55, இவரது பேரன் யோகேஷ், பேத்தி பிரதியுசா ஆகியோர் பள்ளிக்கு சென்று விட்டு வரும் வழியில் வண்டியூர் வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் 45, என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளார்.
இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செவனம்மாள் ராமலிங்கத்திடம் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசியதுடன் அரிவாளைக் காட்டி ராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து செவனம்மாள் புகாரில் வருஷநாடு போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.