ADDED : நவ 29, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் விளை பொருட்கள் மக்காச்சோளம், வெங்காயம், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை ஏலம் விடப்படுகிறது.
நேற்று கொப்பரை தேங்காய் 567 கிலோ விற்பனைக்கு வந்தன. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமுருகன் தலைமையில் ஏலம் நடந்தது.
தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு 8 குவியல்களாக வைக்கப்பட்டன.
முதல் தரம் கொப்பரை கிலோ ரூ.139.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.90க்கு விற்பனையாகியது.
விவசாயிகள் வேளாண் விளைபொருட்களையும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு விற்பனை மேலாளரை 95245 97224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கண்காணிப்பாளர் தெரிவித்தார்.