/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் கொப்பரை கிலோ ரூ.227க்கு விற்பனை
/
தேனியில் கொப்பரை கிலோ ரூ.227க்கு விற்பனை
ADDED : ஜூன் 12, 2025 02:49 AM
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் இ நாம் மறைமுக ஏலத்தில்கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 227 க்கு விற்பனையானது.
தேனி சுக்குவாடன்பட்டியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளின் வேளாண் விளை பொருட்கள் இநாம் முறையில் ஏலம் விடப்படுகிறது. நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில் 5 விவசாயிகள் 1.19 டன் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மறைமுக ஏலத்தில் 8 வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் ரக கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.227 க்கு விற்பனையானது.
குறைந்தபட்சமாக கிலோ ரூ. 180க்கு விற்பனையானது. மொத்தம் 1.19 டன் கொப்பரை தேங்காய் ரூ. 2.51 லட்சத்திற்கு விற்பனையானது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இநாம் முறையில் விற்பனை செய்ய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம். அல்லது 99766 30746 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.