/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் காட்டன் ரக சேலை உற்பத்தி, விற்பனை விறுவிறுப்பு: தீபாவளி நெருங்குவதால் நெசவாளர்கள் சுறுசுறுப்பு

ADDED : ஆக 29, 2025 03:38 AM

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ல் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிப்பதால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி ஆகிறது. காட்டன் ரக சேலைகளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருந்தாலும் சீசன் காலங்களில் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
இன்னும் சில வாரங்களில் தீபாவளி விற்பனை துவங்க இருப்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் சேலைகள் கொள்முதலை தொடர்கின்றனர்.
ஆன்லைன் மூலமும் சேலைகள் வியாபாரம் சுறுசுறுப்பாக உள்ளது. ஓணம், தீபாவளி பண்டிகைகளால் கடந்த சில மாதங்களில் வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை மாறி உள்ளது.
உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் பல வண்ணங்கள், டிசைன்களில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகள் உற்பத்தி ஆகிறது. தற்போது உற்பத்தியாகும் சேலைகள் இருப்பு வைக்கப்படாமல் உடனுக்குடன் விற்பனை ஆகிறது. நெசவாளர்களுக்கும் உற்பத்திக்கான போனஸ் தீபாவளி பண்டிகைக்கு கிடைக்கும் என்பதால் கூடுதல் உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளைன், கோர்வை, புட்டா, ஜரிகை பேட் சேலைகள் விலை தரத்திற்கு தக்கபடி ரூ.500 முதல் ரூ.2000 வரையிலான விலையில் உள்ளன. சேலைகள் உற்பத்தி மையங்களில் மொத்த விற்பனையுடன் தற்போது சில்லறை விற்பனையும் அதிகம் உள்ளது.