/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்திற்கு இடையூறாக போடியில் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
/
போக்குவரத்திற்கு இடையூறாக போடியில் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
போக்குவரத்திற்கு இடையூறாக போடியில் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
போக்குவரத்திற்கு இடையூறாக போடியில் பிளக்ஸ் பேனர்கள் அமைப்பு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
ADDED : ஆக 29, 2025 03:37 AM
போடி: போடியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை அகற்ற வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
போடி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி( தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் பார்கவி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர அமைப்பு ஆய்வாளர் சுகதேவ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:
பிரபாகரன், (தி.மு.க.,) : உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தெருக்களில் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சுகாதார அலுவலர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிகண்டன், (பா.ஜ.,): உயர் நீதிமன்ற உத்தரவை நகராட்சி கண்டு கொள்ளாததால் காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் பிளக்ஸ், பேனர் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
நகரமைப்பு ஆய்வாளர்: காமராஜ் பஜார் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டது. பேனர்கள் அகற்ற நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ரமேஷ்குமார், (தி.மு.க.) : பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காமல் வரி வசூல் செய்வதை தடுக்க வேண்டும். தலைவர் : பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் அதற்கான வரி செலுத்த வேண்டியது இல்லை.
மணிகண்டன் : போடி பஸ் ஸ்டாண்டில் பஸ் போக்குவரத்து, பயணிகளுக்கு இடையூறாக டூவீலர், கார், தள்ளுவண்டி கடைகளை நிறுத்தி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஜா மைதீன், (ஆர்.ஐ): போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தள்ளு வண்டி கடை ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
பிரபாகரன் : எதிர்பாராத இறப்பு சம்பந்தமாக உரியவர்களுக்கு இறப்பு சான்று டாக்டர் தருவது இல்லை. ஆர்.டி.ஓ., மூலம் இறப்பு சான்று பெற வேண்டியது உள்ளது. இதனால் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களிடம் அபிடவிட் பெற்று சான்று வழங்க வேண்டும்.
சுகாதார அலுவலர் : குறிப்பிட்ட நாட்களுக்குள் அருகே வசிக்கும் இரண்டு நபர்களிடம் அபிடவிட் வாங்கி கொடுத்தால் அதற்கான சான்று வழங்கப்படும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் உப பைப்லைன் அமைக்கப்படாத இடங்களில் புதிதாக பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்திட ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.