/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.9 லட்சம் மோசடி கோர்ட் ஊழியர் சிக்கினார்
/
ரூ.9 லட்சம் மோசடி கோர்ட் ஊழியர் சிக்கினார்
ADDED : ஜூன் 04, 2025 01:31 AM
பெரியகுளம்,:நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக, 9 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு புதுத்தெரு சுப்பிரமணிய சந்தையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீனியம்மாள், 40. இவர்கள் மகன் அருண் பாண்டியன், 21.
இவருக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக, பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்த, தேனி, கொடுவிலார்பட்டி கேபி தெருவை சேர்ந்த ஹேமலதா, 49, என்பவர் 2023ல் கூறியுள்ளார்.
சீனியம்மாள் வீட்டிற்கு 2023 அக்., 22ல் சென்று, 9 லட்சம் ரூபாயை ஹேமலதா பெற்று மோசடி செய்தார். சீனியம்மாள் புகாரின்படி, ஹேமலதாவை தென்கரை போலீசார் கைது செய்தனர்.

