ADDED : நவ 27, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே குட்டியாறுவாலியில் வசிக்கும் முருகனுக்கு சொந்தமான பசு நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றது. குடியிருப்புகள் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை, திடீரென காட்டிற்குள் இருந்து வந்த புலி தாக்கியது. அதனை பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர் பார்த்து அதிர்ச்சியில் பலமாக கூச்சலிட்டார். அந்த சப்தத்தை கேட்டு பலர் ஓடி வந்த நிலையில் புலி காட்டிற்குள் தப்பி ஓடியது.
எனினும் புலி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பசு இறந்தது.
குட்டியாறுவாலி பகுதியில் சமீப காலமாக பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி இறந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.