/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுவை புனிதமாக நினைத்து பாதுகாக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர் பேச்சு

ADDED : அக் 07, 2024 07:13 AM
போடி: 'பசுவை புனிதமாக நினைத்து பாதுகாக்க வேண்டும்' என, போடியில் நடந்த ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) பொதுக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் பேசினார்.
நிகழ்வில் போடி ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., தேனி மாவட்டத் தலைவர் உதயகுமார், போடி நகரத் தலைவர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் பேசியதாவது:
உலக நாடுகளுக்கு இதயமாக விளங்குகிறது இந்தியா. மாவட்டங்களிலேயே தேசிய தரச்சான்று பெற்றது தேனி மாவட்டம்.
ஆன்மீகத்தில் சிறப்பும், சிறந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்களைக் கொண்டது தேனி மாவட்டம். ஆர்.எஸ்.எஸ்., 100 ஆண்டுகளை நோக்கி இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தேசம் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது. பெண்களை தெய்வமாக பார்க்கக்கூடிய கூடிய தேசம் நம் பாரத தேசம். கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர் கண்ணதாசன். இறுதியில் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி புத்தகம் எழுதினார். அதை நாம் படித்தாலே இந்து மதத்தின் பெருமை தெரியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுதேசியத்தையும் வலியுறுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். தினம்தோறும் 1.5 லட்சம் பசு மாடுகள் கொல்லப்படுகின்றன.புனிதமான நாட்டில் பசுகொல்லப்படுவதை தடுத்து, பசுவை புனிதமாக நினைத்து பாதுகாக்க வேண்டும். ஆலயங்கள், தேசத்தையும் பாதுகாத்திட வேண்டும்., என்றார். நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.