ADDED : மே 23, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மணி கட்டி ஆலமரம் பகுதியில் வசிப்பவர் ஜாபர் அலி 41, இவர் காட்டுப் பள்ளிவாசல் அருகில் மாடு, ஆடுகள் வளர்த்து வருகிறார். மாட்டு கொட்டகையில் இருந்த ஆடு ஒன்று மே 18 ல் காணாமல் போனது.
இது தொடர்பாக கொட்டகை பக்கம் சந்தேகப்படும்படி உலவிய கம்பத்தை சேர்ந்த சிபி சூர்யா 24, முகிலன் 25, மணிகண்டன் 19 ஆகியோரிடம் ஜாபர் அலி விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைத்த மூவரும் அரிவாளால் மாட்டு கொட்டகை, தண்ணீர் தொட்டியை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். புகாரில் கம்பம் வடக்கு போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.