/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாலிபால் போட்டியில் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாதனை
/
வாலிபால் போட்டியில் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாதனை
வாலிபால் போட்டியில் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாதனை
வாலிபால் போட்டியில் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாதனை
ADDED : ஆக 01, 2025 02:08 AM

கம்பம்: குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வாலிபால் போட்டியில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்று கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குறுவட்ட வாலிபால் போட்டிகளில் 21 பள்ளிகள் பங்கேற்றது. 14 வயதுக்குட்பட்ட ஜூனியர் இறுதிப் போட்டியில் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியும், நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளியும் மோதியது. 25 --: 18, 25- :14 என்ற நேர் செட் கணக்கில் சி.பி.யூ.,பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
17 வயது சீனியர் பிரிவு இறுதி போட்டியில் சி.பி.யூ. பள்ளியும், நாகமணியம்மாள் பள்ளியும் மோதியதில் 25 :- 13 , 25 :-8 என்ற நேர் செட் கணக்கில் சி.பி.யூ. பள்ளி வெற்றி பெற்றனர்.தொடர்ந்து 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியும் , அல் அஜ்ஹர் பள்ளியும் மோதியதில் 25 -:13, 25 :- 14 என்ற நேர் செட் கணக்கில் சி.பி.யூ.,பள்ளி வெற்றி பெற்றது. வாலிபால் போட்டிகளில் மூன்று நிலைகளிலும் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை மாணவர்களை பள்ளியின் தாளாளர் திருமலை சுதாகரன், பொருளாளர் இராமசாமி, தலைமையாசிரியர் சையது அப்தாகிர் பாராட்டி பரிவுகள் வழங்கினார்கள். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.