/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி தடையை மீறி கூடலுாரில் பட்டாசு வெடிப்பது அதிகரிப்பு
/
நகராட்சி தடையை மீறி கூடலுாரில் பட்டாசு வெடிப்பது அதிகரிப்பு
நகராட்சி தடையை மீறி கூடலுாரில் பட்டாசு வெடிப்பது அதிகரிப்பு
நகராட்சி தடையை மீறி கூடலுாரில் பட்டாசு வெடிப்பது அதிகரிப்பு
ADDED : நவ 10, 2024 04:57 AM
கூடலுார் : கூடலுாரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மீறி, சில நாட்களாக பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது.
கூடலுாரில் கடந்த சில மாதங்களாக நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. சுபநிகழ்ச்சிகளில் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் பட்டாசு வெடித்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. பேப்பர் கழிவுகள் ரோடுகளில் குவிக்கிறது. சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
இதனால் அக்டோபரில் நடந்த கூடலுார் நகராட்சி கூட்டத்தில் தீபாவளி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறிசில நாட்களாக சுப துக்க நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. மெயின் பஜார், எல்.எப்., ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பட்டாசிலிருந்து வெளியேறும் பேப்பர்கள் குவிந்து கிடக்கிறது. புகையால் பலர் மூச்சு விட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பட்டாசு வெடிப்பதை மகிழ்ச்சியாக உணரும் வேளையில் அதன் தீமைகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
பட்டாசிலிருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகையில் இருந்து வரும் நுண்ணிய துகள்களை சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவி உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பட்டாசு வெடிக்க தடை விதித்து நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருந்த போதிலும், இதற்கான அறிவிப்பை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராத தொகையை வசூலிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.