/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிரிக்கெட் போட்டி: மேனகா மில்ஸ் மிஷின் கன்ஸ் அணிகள் வெற்றி
/
கிரிக்கெட் போட்டி: மேனகா மில்ஸ் மிஷின் கன்ஸ் அணிகள் வெற்றி
கிரிக்கெட் போட்டி: மேனகா மில்ஸ் மிஷின் கன்ஸ் அணிகள் வெற்றி
கிரிக்கெட் போட்டி: மேனகா மில்ஸ் மிஷின் கன்ஸ் அணிகள் வெற்றி
ADDED : ஆக 04, 2025 04:45 AM
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் நடந்த, முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் மேனகா மில்ஸ், மிஷன் கன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்த முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டித் தொடர் தப்புக்குண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் மேனகா மில்ஸ், ஜாலி சி.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அணி வீரர்கள் வெங்கடேஷ் 123, துரை 92 ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த ஜாலி சி.சி., அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
மற்றொரு போட்டியில் ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப், மிஷன் கன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜாக்கி ஸ்போர்ட்ஸ் அணி 40 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த மிஷன் கன்ஸ் அணி 38.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ்குமார் 95 ரன்கள் எடுத்தார்.