/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷர்ஸ் ஜாலி சி.சி., அணிகள் வெற்றி
/
கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷர்ஸ் ஜாலி சி.சி., அணிகள் வெற்றி
கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷர்ஸ் ஜாலி சி.சி., அணிகள் வெற்றி
கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷர்ஸ் ஜாலி சி.சி., அணிகள் வெற்றி
ADDED : அக் 07, 2025 04:42 AM
தேனி: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி லீக் சுற்றில் ஸ்மாஷர்ஸ், ஜாலி சி.சி. அணிகள் வெற்றி பெற்றன.
தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானத்தில் முதல் டிவிஷன் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. ஸ்மாஷர்ஸ், மேனகா மில்ஸ் ஜூனியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் ஜூனியர் அணி 41.1 ஓவரில்10 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. ஜீவன் 33 ரன்கள், மோகனசுந்தரம் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சேசிங் செய்த ஸ்மாஷர்ஸ் அணி 36.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெறறி பெற்றது. ஜீவன்குமார் 45 ரன்கள், முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் ஜாலி சி.சி., மெஷின் கன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜாலி சி.சி., அணி 42.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. துரைப்பாண்டி 55 ரன்கள், ராஜபாண்டி 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த மெஷன்கன்ஸ் அணி 30.4 ஓவர்களில் 139 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
திவாகர் 39 ரன்கள், ஜாலி சி.சி., அணி சுரேஷ்குமார் 29 ரன்கள் வழங்கி 5 விக்கெட் வீழ்த்தினார்.