ADDED : அக் 07, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம், மதுரை பாண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் இணைந்து தட்டச்சு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் தாமோதரன், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற முன்னாள் உறுப்பினர் சீனிவாசன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல், பயிற்சி நிறுவன நிர்வாகி சுந்தரம் பங்கேற்றனர்.