/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பள்ளி மாணவர் மர்ம காய்ச்சலால் இறப்பு
/
கம்பம் பள்ளி மாணவர் மர்ம காய்ச்சலால் இறப்பு
ADDED : நவ 27, 2024 08:14 AM
கம்பம்: கம்பத்தில் 10 ம் வகுப்பு படித்த லோகித் 15, என்ற மாணவர் மர்ம காய்ச்சலால் பலியானார்.
கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சண்முகம். டி.வி. மெக்கானிக் . இவரது மகன் லோகித் 15, இங்குள்ள மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். நவ . 20 ல் காய்ச்சல் பாதித்து கம்பம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். 3 நாட்களாக காய்ச்சல் குறையாத நிலையில் டிஜ்சார்ஜ் செய்து, பெற்றோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கும் ஒரு நாளுக்கு பின் டிஜ்சார்ஜ் செய்துள்ளனர். வேறு வழி தெரியாமல் நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகித் இறந்தார். உயிரிழந்த மாணவர் டெங்கு காய்ச்சலால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, இறந்த மாணவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்றனர்.
கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், இறந்த மாணவருக்கு 4 ஆண்டுகளாக தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும் நோய் இருந்துள்ளது.
தற்போது சிகிச்சைக்கு எங்களிடம் வரவில்லை ''என்றார். மாணவர் காய்ச்சல் பாதித்து இறக்கும் வரை சுகாதாரத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கம்பம் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.