ADDED : பிப் 13, 2024 04:59 AM

மூணாறு : மாங்குளம் ஊராட்சியில் தாழும்கண்டம் பகுதியில் மது போதையில் கையில் அரிவாளுடன் ரகளை செய்தவரை பிடிக்கச் சென்ற போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் தாழும்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூ40. இவர், அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
அச்சமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிஜூவிடம் இருந்து அரிவாளை கைப்பற்ற முயற்சித்தனர்.
அப்போது ஆத்திரமடைந்தவர் போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்ட முயன்றார். அதில் போலீஸ்காரர் சாகிர்உசேனின் 34, கையில் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயமடைந்தார்.
அவர் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஜூவை போராடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.