/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 25, 2025 03:10 AM
தேனி: உத்தமபாளையம் காஜி கருத்தராவுத்தர் கலை அறிவியல் கல்லுாரியின் இளைஞர் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் முகம்மது மீரான் தலைமை வகித்தார்.
ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சுமையாபானு வரவேற்றார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் பேசுகையில்,'சைபர் பாதுகாப்பில் புதுவிதமான குற்றங்கள் நடந்துவருகின்றன. இதிலிருந்து தப்பிக்க இணையத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், அலைபேசி, தொலைக்காட்சி, ஸ்கீரின் டைம்மை குறைத்து, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், புத்தகங்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வாழ்வு மேம்படும்,' என்றார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்தார். எஸ்.ஐ., அழகுபாண்டி, விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். உதவி பேராசிரியை நஜியா நன்றி தெரிவித்தார்.