ADDED : ஏப் 26, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கம்பம் எஸ்.எம்.பி.எம்., மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அவர் ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள்,ஆன்லைன் கேம்ஸ், சமூகவலைதள குற்றங்கள், போலியான செயலிகளில் பெறும் கடன்கள் உள்ளிட்ட சைபர் குற்றங்களில் மாணவ, மாணவிகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்து விளக்கினார். தொழில்நுட்ப எஸ்.ஐ., அழகுபாண்டி, பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு சைபர் குற்றம் குறித்து புகார் அளிக்கும் விதம், டோல் பிரி எண் 1930, மேலும் www.cybercrime.gov.in என்ற இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.