/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப்பொருட்கள் வந்துள்ளதாக மிரட்டும் அலைபேசி அழைப்புகள் எச்சரிக்கும் சைபர்கிரைம் போலீசார்

ADDED : ஜன 29, 2024 06:34 AM
தேனி: 'மாவட்டத்தில் பலருக்கு அலைபேசி அழைப்புகளில் உங்கள் பெயரில் வந்துள்ள பார்சலில் போதைப் பொருட்கள் வந்துள்ளதாக மிரட்டி, பணம் பறிக்க சிலர் துவங்கி உள்ளனர். இந்த அழைப்புகள் பற்றி அச்சப்படாமல் தகவல் தெரிவிக்க வேண்டும்.' என, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அலைபேசி பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளின் விதிமுறைகளை படித்து பார்க்காமல் அவற்றை பயன்படுத்து கின்றோம். இதனை பயன்படுத்தி சில சைபர் கிரைம் குற்றவாளிகள் மக்களிடம் பணம் பறிப்பதும் தொடர்கிறது.
அதைத்தவிர வங்கியில் இருந்து பேசுவதாகவும், வெளிநாட்டு வேலை, பண இரட்டிப்பு, பரிசு விழுந்துள்ளது என சமூக வலைதளங்கள் வழியாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் தற்போது பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப் பொருட்கள் வந்துள்ளது.
உங்கள் வீட்டிற்கு போலீஸ் வரும் என பயமுறுத்தி பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.போலீசார் கூறுகையில், சிலருக்கு புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் போலீசார் பேசுவது போல் எதிர்முனையில் உள்ள நபர் பேசுகிறார். அவர் பொது மக்களின் முழு முகவரியை கூறி, உங்களுக்கு வந்த பார்சலில் போதைப் பொருள் உள்ளது.
உங்களை கைது செய்ய உள்ளோம். இதனை தவிர்க்க குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என மிரட்டுகின்றனர்.
இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் '1930' என்ற அலைபேசி எண், www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.