/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2025 05:51 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. டி.சுப்புலாபுரம் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு இரு ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும். கடந்த முறை ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜனவரி 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து திண்டுக்கல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜனவரி 6ல் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
பெரும்பாலான விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஜனவரி 21ல் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் கூலியை உயர்த்தி தராத விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்தும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து மாணிக்க சுவாமி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தை விளக்கி தொ.மு.ச., ஏ.டி.பி., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசினர்.