/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் நடத்தை விதிகளால் பணப்பரிமாற்றத்தில் சுணக்கம்: ஆண்டிபட்டி பகுதி ஜவுளி வியாபாரிகள் பாதிப்பு

ADDED : மார் 21, 2024 02:44 AM
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நெசவுத் தொழிலை நம்பி உள்ளனர். இப்பகுதி கைத்தறி, விசைத்தறிகளில் 40,60,80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள், கலர், வெள்ளை வேஷ்டிகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகள் ஈரோடு சந்தைக்கும் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாகவும் வந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதால் வியாபாரிகள் சேலைகள், வேஷ்டிகள் கொள்முதல் செய்யவும், பண பரிமாற்றத்திற்கும் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே உள்ள ஆர்டர்களுக்கும் ஜவுளிகளை அனுப்புவதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் வியாபாரிகள் வெளியூர்களுக்கு சேலைகள், வேஷ்டிகள் அனுப்புவதை தவிர்க்கின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் உண்மை தன்மையை உறுத்தி செய்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உதவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையால் தொடர்ந்து உற்பத்திக்கும் தயக்கம் காட்டுகின்றனர். லோக்சபா தேர்தலுக்குப் பின் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பு மீண்டும் வியாபாரத்தில் சகஜ நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.